TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 27

உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தாலும் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 27
Published on
Updated on
3 min read

* தொல்காப்பிய நெறி நின்றவர் - கம்பர்

* வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் - கம்பர்

* உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தாலும் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் என்றவர் - கால்டுவெல்.

உரைநடை: அண்ணல் அம்பேத்கர்

* அம்பேத்கர் மராட்டிய கொங்கண் மாவட்டத்தில் தபோலி என்னும் அம்பவாடே பிறந்தார்.

* பிறந்த தேதி: 14.04.1891

* தந்தை: இராம்ஜி சக்பால்

* தாய்: பீமாபாய்

* இவர்களுக்கு 14வது பிள்ளையாகப் பிறந்தார்.

* இயற்பெயர்: பீமாராவ் ராம்ஜி

* மகாபாரதப் பீமனைப்போலவே தன்மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் பீம் எனப் பெயர் சூட்டினார் தந்தை இராம்ஜி சக்பால்.

* ஆசிரியர் என்பவர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்க வேண்டும்.

கல்வி:

* 1908 இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப்படிப்பு

* 1912 இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம்

* 1915 இல் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்

* 1916 இல் இலண்டம் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

அம்பேத்கர் முதலில் நடத்தப் பெற்ற போராட்டங்கள்:

* 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலயநுழைவு முயற்சியும்,

* 1927 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் இருபதாம் தேதி அம்பேத்கார் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போரட்டமும் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எனலாம்.

* இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்தநிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்கலை நீங்கள் ஈடேற்ற வேண்டும்" என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாகக் கூறியவர் - அன்னல் அம்பேத்கர்.

* தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்தவர் - அன்னல் அம்பேத்கர்.

* வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1930

* அந்த மாநாட்டில் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

* அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று தனது கருத்தைத் தொடங்கினார் அம்பேத்கர்.

* ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் வட்டமேசை மாநாட்டின் வழியே உலகஅரங்கில் எதிரொலித்தது.

* இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வகுக்க 7 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது.

* இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்ட தேதி - 26.01.1950

* செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம்

* உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் என்றவர் அம்பேத்கர்.

* மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தவர் - அம்பேத்கர்

* 1946 ஆம் ஆண்டு மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

* மும்பையில் அவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

* இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்னும் நூலைப் பொருளாதாரத் துறையின் சிறந்த நூலாகக் கருதிப் பொருளியல் வல்லுநர்களும் பேரசிரியர்களும் பெரிதும் மதித்துப் போற்றினார்கள்.

* இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.

* சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றவர் அம்பேத்கர்.

* சனநாயகத்தின் மறுபெயர்தான் சகோதரத்துவம்; சுதந்தரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது.

* எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி நடத்துவதே சமத்துவமாகும் என்று சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர் அம்பேத்கர்.

* சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்; எங்கே சமத்துவம் மறுக்கப்படுகின்றதோ, அங்கே மனிதப் பண்பு மறைந்துவிடுவதை அவர் அனைவருக்கும் உணர்த்தியவர் அம்பேத்கர்.

பெரியாரின் புகழாரம்:

* அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்

* பகுத்தறிவுச் செம்மல்

* ஆராய்ச்சியின் சிகரம்

* மக்களின் மாபெரும் வழிகாட்டி

* அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் நாம் காணமுடியாது என்று பெரியார் புகழாரம் சூட்டினார்.

* அம்பேத்கரை ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும் என்று புகழ்ந்தவர் - நேரு

* தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தன்னந் தனியாகச் செயல்பட்டவர். தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் என்று இராசேந்திர பிரசாத் பாராட்டியுள்ளார்.

* இறப்பு : 06.12.1956

விருதுகள்:

* இந்திய அரசு 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா (இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.

* சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து அவர்.

துணைப்பாடம்: அன்றாட வாழ்வியல் சட்டம்

* உலக நாடுகளிடையேயுள்ள தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை அனைத்து நாட்டுச் சட்டம் என்கிறோம்.

* நம் நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறோம்.

* நாட்டின் நாடாளுமன்றமும் மாநிலச் சட்டமன்றங்களும் அரசுத் துறைகளின் அலுவலகங்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.

* பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்களென எவையுமில்லை.

* சட்டப்படி தண்டிக்கத்தக்க செயலையே குற்றமென்கிறோம்.

* குற்றங்கள் சட்டம் செய்யக்கூடாது என்று வலியுருத்திச் சொன்னதைச் செய்தல் மற்றொன்று, சட்டம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதைச் செய்யாமல் இருத்தல் என இருவகைப்படும்.

போக்குவரத்து சட்டங்கள்:

* சிவப்பு விளக்கு எரிந்தால், உடனே வண்டியை நிறுத்துதல் வேண்டும்

* பச்சை விளக்கு எரிந்தால் புறப்படுதல் வேண்டும்.

* அரசியல் சாசனத்தின் 19(1) ஆவது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு.

* தகவல் அறியும் உரிமைச்சட்டம் சரத் - 2005 பிரிவு 6

* International Law - சர்வதேச சட்டம்

* Constitutional Law - அரசியில் அமைப்புச் சட்டம்

* Supreme Court - உச்சநீதி மன்றம்

* High Courts - உயர்நீதி மன்றங்கள்

* Writs - சட்ட ஆவணங்கள்

* Substantive Laws - உரிமைச் சட்டங்கள்

* Procedureal Laws - செயற்பாட்டு முறைச்சட்டங்கள்

* Indian penal code - இந்தியச் தண்டனைச் சட்டத் தொகுப்பு

* Criminal Procedure code - குற்றவியல் செயற்பாட்டுமுறைத் தொகுப்பு

* Civil Procedure code - உரிமையியல் செயற்பாட்டுமுறைத் தொகுப்பு

* Indian Evidence Act - இந்தியச் சான்று சட்டம்

* Transfer of Property Act - சொத்துமாற்றுச் சட்டம்

* Indian Succesion Act - இந்திய வாரிசுரிமைச் சட்டம்

* Court fee stamp - நீதிமன்றக் கட்டண வில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com