பள்ளி ஆய்வக உதவியாளர் பணித் தேர்வு - 1

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றிபெறுபவர்களில்
பள்ளி ஆய்வக உதவியாளர் பணித் தேர்வு - 1
Published on
Updated on
5 min read

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றிபெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படுகிறது.

தேர்வு பாடத்திட்டம்: ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு அளவில் சமச்சீர் பாடத்திட்டம்.

வினாக்கள்:

1. பொது அறிவியல் (கொள்குறி வகை)  - 120 

2. பொது அறிவு - 30

3. நேர்முகத் தேர்வுகள் - 25

தேர்வு நாள்: 31.05.2015

நேரம்:  காலை 10 மணி முதல் 12.30 மணி வரை

I. பொது அறிவியல்

இயற்பியல்

வேதியியல்

விலங்கியல்

தாவரவியல்

II.  பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

III. புவியியல்

IV. இந்திய வரலாறு மற்றும் பண்பாடு

V. இந்திய அரசியலமைப்பு

VI. பொருளாதாரம்

VII. இந்திய தேசிய இயக்கம்

VIII. அறிவுக்கூர்மை, காரணமறிதல் மற்றும் கணிப்பொறி அறிவு போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள விரிவான வகையில் பாடங்களை படித்து முடித்து பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்கள், நிரப்புதல், சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், குறுகிய வினாக்கள் போன்றவைகளுக்கு விடையறிதல் வேண்டும். பாடப்புத்தகங்களை படித்த பின்னர்தான் சந்தைகளில் கிடைக்கும் பிற புத்தங்களை படிக்க வேண்டும்

இந்தத் தேர்விற்கு பாடத் தொகுப்பின் அடிப்படையில் தேர்விற்கு பயன்படும் வகையிலும் தினமும் தொடர்ந்து பதிவுகள் வெளியிடப்படும்.

தேர்வு எழுதுபவர்கள் தொடர்ந்து படித்து பயிற்சி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

* அறிவியலில் இயற்பியல் என்பது அளவீடு, இயக்கம், ஒலி, ஒளி, மின்னியல் மற்றும் மின்னனுவியல் போன்றவற்றைப் பற்றி  விளக்குவதாகும்.

* வேதியியல் என்பது நம்மைச்சுற்றியுள்ள பொருள்களின் தன்மை, பண்புகள் (உலோகம், அலோகம், சுவை, மணம், அமிலம், காரம் போன்றவை) மற்றும் பயன்களைப் பற்றி ஆராய்ந்தறிவதாகும்.

* உயிரியல் என்பது நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகளைப் பற்றி விவரிக்கும் அறிவியல் உயிரியல் ஆகும்.

*  தாவரவியல், விலங்கியல் என்பது உயிரியலின் இரு பிரிவுகள்.

*  செடி, கொடி, மரம் பற்றி தெரிவிப்பது - தாவரவியல்.

*  விலங்குகளைப் பற்றி தெரிவிப்பது - விலங்கியல்.

*  தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

*  உணவுக்கு மட்டுமின்றி நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுவது - தாவரங்கள்.

*  மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்களை நாம் மூலிகைகள் என்று சொல்கின்றோம்.

*  தூதுவளை - சளித்தொல்லை, கோழ அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும்.

*  கீழா நெல்லி - மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.

*  வேம்பு- கிருமி நாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.

*  நெல்லி - வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும்.

*  துளசி - சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

*  கற்பூரவல்லி - வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.

*  வசம்பு - வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும்.

*  மஞ்சள் - கிருமி நாசினி, அழகுபடுத்தல்

*  பிரண்டை - பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்.

*  இஞ்சி - செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்.

*  மிளகு - தொண்டைக் கரகரப்பை நீக்கும்.

*  தாவரகங்களில் இலை, தண்டு, பூ முதலிய பல பகுதிகள் நறுமணப் பொருள்களாகப் பயன்படுகின்றன.

*  சுக்கு, புதினா, வெந்தயம் போன்றவை மருத்துவக் குணம் நிறைந்தவை.

*  மஞ்சள், கிராம்பு போன்றவை நுண்ணுயிரி எதிர்ப்பொருளாகவும் கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றன.

*  இந்தியாவில் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா.

*  தரைகீழ்த்தண்டு - இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்களின் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளது. இது உணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.

*  நார்த்தாவரங்கள் - ஆடை, சணல் கயிறு, சாக்குப்பை ஆகியவற்றை தாவரங்களே வழங்குகின்றன.

*  ஆடை - பருத்திச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

*  கயிறு - தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

*  சாக்குப்பை - நார் சணல் என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

*  தலையணை, மெத்தை, பாய், விரிப்புகள் போன்றவற்றிலும் நார்தாவரங்கள் பயன்படுகின்றன.

*  நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.

*  வாழை நார், சணல் நார் போன்றவை தாவரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து பெறப்படுகின்றன.

*  கற்றாழை, அன்னாசி போன்ற தாவரங்களின் இலைகளிலிருந்து நார்கள் எடுக்கப்படுகின்றன. இவை இலை நார்கள் எனப்படும்.

*  விதையின் மேற்புறத்திலிருந்து பெறப்படும் நார்கள் மேற்புற நார்கள் எனப்படும். (பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு)

*  சணல் தாவரம் இன்றைய உலகில் நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காவும் வளர்க்கப்படுகின்றது.

*  சணல் தாவரங்களில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால், இது உயிரி நெகிழி (Bio-Plastic) தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

*  உயிரி நெகிழி மண்ணில் மக்கும் தன்மையுடையது.

*  பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் தாவரப் பகுதி மரக்கட்டை எனப்படும்.

*  தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும்.

*  வன்கட்டை மென் கட்டையை விட அதிக உறுதியானது.

*  பூஞ்சைகள், கரையான்கள் மற்றும் துளையிடும் பூச்சிகள் வன்கட்டையில் பெரும்பாலும் சிதைப்பதில்லை.

*  வன்கட்டையில் பிசின், ரெஸின், இரப்பர்பால் மற்றும் எண்ணெய் முதலியன காணப்படுப்படுவதால், வன்கட்டை கடினத்தன்மையையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையையும் பெற்றுள்ளது.

*  வன்கட்டை அதிக மெருகேறும் தன்மையுடையது. எனவே கட்டுமானப் பணிகளுக்கு இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

*  பூஞ்சைகளும், கரையான்களும் மென்கட்டையை அதிக அளவில் சிதைக்கின்றன.

*  தேக்கு - கட்டுமானம், மரச்சாமான்கள் செய்வதில் பயன்படுகின்றன.

*  பலா - கட்டுமானம் மற்றும் பழங்களாகப் பயன்படுகின்றன.

*  யூகலிப்டஸ் - தைலம் மற்றும் காகிதம் தயாரிக்கப் பயன்படுகின்றன.

*  மா - கட்டுமானம் மற்றும் பழங்களாகப் பயன்படுகின்றன.

*  இலவம் - தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுமொம்மைகள், பஞ்சு மெத்தை, தலையணைகள் தயாரிக்க பயன்படுகின்றன .

*  தென்னை - கூரை வேய்தல், கட்டுமானம், இளநீர், தேங்களாகப் பயன்படுகின்றன.

*  வில்லோ - விளையாட்டுப் பொருள்கள், கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படுகின்றன.

*  கருவேலம் - மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

*  சந்தன மரம் - சந்தனம், கலைப் பொருள்கள், மரப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

*  மல்புரி - டென்னிஸ், ஹாக்கி மட்டைகள் தயாரிக்க பயன்படுகின்றன.

*  பைன் - இரயில் படுக்கைகள், படகுகள் தயாரிக்க பயன்படுகின்றன.

*  மல்லிகைக்கு பெயர் வாய்ந்தது  - மதுரை

*  நெல்லுக்கு பெயர் பெற்றது - தஞ்சாவூர்

*  வெற்றிலைக்கு பெயர் பெற்றது - கும்பகோணம்.

*  மாம்பழத்துக்கு பெயர் பெற்றது - சேலம்

*  உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.

*  இனிப்பும், நிறமும் கொண்ட குதப்பும் மிட்டாய் சுவைக்கும் பழக்கம் பற்களுக்கும் உடல் நலத்திற்கும் நல்லதல்ல.

*  தாவரங்களின் வேர், தண்டு, இலை, மலர், காய், கனி, விதை போன்றவை நமக்கு உணவாகின்றன.

*  விலங்குகளிலிருந்து பால், முட்டை, மாமிசம் போன்ற பலவிதமான உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன.

*  உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துக்களை ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.

*  கார்போஹைட்ரேட்டுகள் - ஆற்றலை அளிக்கின்றன.

*  புரதங்கள் - வளர்ச்சி அளிக்கின்றன.

*  கொழுப்புகள் - ஆற்றல் அளிக்கின்றன.

*  வைட்டமின்கள் - உடலியல் செயல்களை ஒழுங்குப்படுத்துகின்றன.

*  தாது உப்புகள் - உயலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன.

*  நீர் - உணவைக் கடத்துகிறது; உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது.

*  தர்ப்பூசணியில் நீரின் அளவு - 99 சதவிகிதம்.

*  வெள்ளரிக்காயில் நீரின் அளவு - 95 சதவிகிதம்

*  காளானில் நீரின் அளவு - 92 சதவிகிதம்.

*  பாலின் நீரின் அளவு - 87 சதவிகிதம்.

*  உருளைக்கிழங்கில் நீரின் அளவு - 75 சதவிகிதம்.

*  முட்டையில் நீரின் அளவு - 73 சதவிகிதம்.

*  ஒரு ரொட்டித் துண்டின் நீரின் அளவு - 25 சதவிகிதம்.

*  காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றிலுள்ள வைட்டமின் சத்து இழக்கப்படுகிறது.

*  பெரும்பாலான காய்கறிகள், பழங்களின் தோலிதான் அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் காணப்படுகின்றன.

*  தானியங்கள், பயறு வகைகளைப் பலமுறை கழுவுவதால் அதிலுள்ள வைட்டமின்களையும் தாது உப்புகளையும் இழந்து விடுகிறோம்.

*  புரத சத்து குறைவினால் குழந்தைகளுக்கு குவாஷியோர்கள் மற்றும் மராஸ்மஸ் நோய்கள் ஏற்படுகின்றன.

*  குவாஷியோர்கள் நோயிக்கான அறிகுறிகள் - வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம்.

*  மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறிகள் - குச்சி போன்ற கை, கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளர்ச்சி குறைதல்.

*  புரத சத்து நிறைந்துள்ள உணவுப் பொருள்கள் - மீன், இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள்.

*  வைட்டமின் A குறைவினால் ஏற்படும் நோய் - மாலைக்கண் நோய்

*  வைட்டமின் B  குறைவினால் ஏற்படும் நோய் - பெரி - பெரி.

*  வைட்டமின் C  குறைவினால் ஏற்படும் நோய் - ஸ்கர்வி

*  வைட்டமின் D குறைவினால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ்

*  வைட்டமின் E குறைவினால் ஏற்படும் நோய் - மலட்டுத் தன்மை

*  வைட்டமின் K குறைவினால் ஏற்படும் நோய் - இரத்தம் உறையாமை.

*  இரத்தம் உறையாமை நோய்க்கான அறிகுறிகள் - சிறிய காயம் ஏற்படும் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல்.

*  மலட்டுத் தன்மை நோய்க்கான அறிகுறிகள் - குழந்தையின்மை, நோய் எதிர்ப்புத் தன்மை குறைதல்.

*  ரிக்கட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் - வலிமையற்ற, வளைந்த எலும்பு

*  ஸ்கர்வி நோய்க்கான அறிகுறிகள் - பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்.

*  கால்சியம் குறைவினால் ஏற்படும் நோய்கள் - எலும்பு மற்றும் பல் சிதைவு.

*  இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் நோய் - இரத்த சோகை.

*  அயோடின் சத்து குறைவினால் ஏற்படும் நோய் - முன் கழுத்துக் கழலை.

*  முன் கழுத்துக் கழலை நோய்க்கான அறிகுறி - கழுத்துப் பகுதியில் வீக்கம்.

*  இரத்த சோகை நோய்க்கான அறிகுறி - மயக்கம் வருதல், உடல் சோர்வு.

*  எலும்பு மற்றும் பல் சிதைவு  நோய்க்கான அறிகுறி - எலும்பு, பற்களின் வலிமை குறைதல்.

*  கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுப் பொருள்கள் - பால், மீன், பச்சைப் பயறு, கோதுமை.

*  இரும்பு சத்து நிறைந்துள்ள உணவுப்பொருள்கள் - இறைச்சி, ஆப்பிள், கீரை, பேரிச்சம் பழம்

அயோடின் சத்து நிறைந்துள்ள உணவுப்பொருள்கள் - பால், அயோடின் கலந்த உப்பு, *  இறால், நண்டு.

*  அனைத்து ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவாகும்.

*  சர்க்கரை, வெல்லத்தில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துகள் - கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து.

*  நெய், எண்ணெய் வகைகளில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துகள் - கொழுப்பு, அவசியமான கொழுப்பு அமிலங்கள்.

*  கேரட், கத்தரிக்காய், வெண்டைக்காய், குடை மிளகாய், அவரைக்காய், வெங்காயம், முருங்கைக்காய், காலிஃபிளவரில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துகள் -  கரோட்டினாய்டு,  ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து.

*  நெல்லிக்காய், கீரைகள், முருங்கைக் கீரை, கொத்தமல்லித் தழை, முள்ளங்கி இலை, வெங்காயத்தாளில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துகள் - கரோட்டினாய்டு வைட்டமின் A,

*  வைட்டமின் B, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து.

*  மாம்பழம், கொய்யா, தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, தர்ப்பூசணி, சாத்துக்குடி, திராட்சையில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் - கரோட்டினாய்டு வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து.

*  கோழி இறைச்சி, ஈரல், மீன், முட்டை, ஆட்டிறைச்சியில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து - புரதம், கொழுப்பு, வைட்டமின் B, கால்சியம்.

*  பால், நெய், தயிர், பாலாடைக் கட்டி, கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து -  புரதம், கொழுப்பு, வைட்டமின் B.

*  பருப்பு வகைகளில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் - அதிக புரதம், சிறிதளவு கொழுப்பு, வைட்டமின் B, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, நார்ச்சத்து.

*  தானிய வகைகளில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் - அதிக கார்போஹைட்ரேட், சிறிதளவு புரதம், கொழுப்பு, வைட்டமின் B, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, நார்ச்சத்து.

படித்ததை படிப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டால் நல்ல நினைவுத் திறனை பெறலாம்.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com