சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வயல்வெளிகளில்: அ.வேளாங்கண்ணி

Updated On :

வயல் வெளிகளில் வாசம் கொண்ட‌

நண்டுகளும் எலிகளும்

பூமிக்கடியில் புதையுண்டு

மண்ணோடு மண்ணாயின..

வயல் வெளிகளில் சுற்றி வந்த

பறவைக் கூட்டங்கள்

பாதி உணவின்றி உயிர்விட்டன‌

பாதி நீரின்றி இடம் பெயர்ந்தன..

வயல் வெளிகளில் வசந்தம் கொண்ட‌

தென்றலது வெற்றிடத்தில்

மறைந்து போனது

அடிக்கும் சிறு காற்றும்

குறைந்து போனது

அறைக்குள்ளே அடைபட்டு இன்று

வாடிக்கிடக்குது

வயல் வெளிகளில் வீற்றிருந்த

வரப்பும் வாய்க்காலும்

போக்கிடம் தெரியாமல் சொர்க்கம்

சென்றன‌

தன் வாழ்வு முடியக்கண்டு

கண்ணீர் விட்டன..

வயல் வெளிகளில் உற்சாகமாய் ஆடிய‌

கேலிப்பேச்சுக்களும்,

நாட்டுப்புறப்பாடல்களும்

முறைப்பொண்ணு பையன்களின்

காதல்மொழிகளும்

மனிதன் எனும் கொடிய நோயால்

மாண்டுபோயின...

வயல் வெளிகளில் தலையாட்டிக்

கொண்டிருந்த மரங்கள்

பரலோகம் அடைந்தன..

உலகில் உயிர்ப்பித்தற்காக உலகை

சிறப்பித்ததற்காக‌

சீக்கிரமே மறைந்து உலகை

மாசுக்களின் உலகாக

மாற்றிப்போட்டன..

வயல் வெளிகளில் சுய நல மனிதன்

அதன் சத்தையெல்லாம் உறிஞ்சி

சக்கையாக்கி

அதை வெட்டி வெட்டி கட்டம்

போட்டு காசாக்கி

அதன் மேல் மாட மாளிகைகள் கட்டி

விலங்காய் வாழ்ந்துவருகிறான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.