எல்லையொன்று வேண்டும் எதற்கொன்றும் , அதுவே
இன்னல்கள் வாராமல் காக்கின்ற சக்தி !
வல்லவனே என்றிட்டு ஆகிட்டப் பின்னும்
வாழ்வினில் நெறிகள்தனைக் காத்திடல் வேண்டும் !
இல்லையென் றாகிட எதுவொன்றும் விஷமாம்
இன்னதனை உணரார்க்கு இழிவேதான் பலனாம் !
செல்வவளம் எல்லைதனைக் கடக்கவே தூண்டும் ,
சிறிதுமே வழுவாமல் நெறிகாக்க வேண்டும் !
காதலுற்ற போதிலும் எல்லைதனை அவர்கள்
கடக்கா திருப்பதே நெறிமிக்க செயலாம் !
பேதயர்கள் என்றாகி எல்லையைக் கடந்தே
பெரும்பழி தனையேற்றோர் கதைகள்பல உண்டே !
சேதமுறக் கண்டுபின் வாழ்வுதனை இழந்தே
சீரழிவைக் காண்பதோ காண்பவர் சிரிக்க ?
ஏதமற்றக் காதலது என்றாகத் தானே
இனிமையே மிஞ்சும் என்றென்றும் வாழ்வில் !
நாட்டிற்கும் நாட்டிற்கும் எல்லையொன்று உண்டு
நலமுடன் அதுதன்னை என்றென்றும் காக்க !
வீட்டினை, மக்களைப் பிரிந்திட்டு அங்கே
விழிப்புடன் காக்கின்ற வீரர்களைப் போற்று !
கோட்டினைத் தாண்டிவரும் எதிரிகளைக் கண்டு
கொல்வதில் தவறில்லை , தருமமே அதுவும் !
ஆட்டமிடும் எதிரிகளை அடக்கத்தான் வேண்டும்
அதற்காக இன்னுயிரை ஈயவும் தகுமாம் !
எல்லைகள் அற்றதாம் அறிவுலகம் --- கற்கும்
எழுச்சியைக் கொண்டிட்டு அளந்திடணம் !
கல்வியைக் கற்றிட்டுத் தேர்ந்திட்டும் ---- அதன்
கரைதனைக் கண்டவர் எவர்தானோ ?
நல்வித நெறிகளைக் கொள்வதற்கும் ---- வாழ்வில்
நால்வகை வளங்களைச் சேர்ப்பதற்கும்
செல்வத்தை வாரியே வழங்குதற்கும் ---- யார்தான்
செப்பிடத் தகுமோ எல்லைதனை !
எல்லைதனைக் கடந்திட்டு இன்னலுற்ற சீதையளின்
நல்கதையை உலகமதே நன்கறியும் ! ----அல்லலதே
பரிசென்றும் ஆகிடுமாம் ,பழியுறவும் நேர்ந்திடுமாம் ;
நெறிகாக்க மறவாதே நீ !
விளக்கமுற்று என்றும்நல் விவேகமுடன் செயலாற்ற
உளமதிலே தெளிவுற்று உயர்வடைக ! ---- களந்தனிலே
எல்லைதனைக் கடக்காமல் என்றென்றும் வாழ்ந்திட்டு
நல்லயெதிர் காலமதை நாடு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலை கிராமங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகள் செயல்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தல்: அமைச்சா் பா்வேஸ்

‘பொறியியல் பாடத்திட்டங்கள் ஒரே நிலையானதாக இருக்கக் கூடாது’
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

