பட்டதாரி : அழகூர். அருண் . ஞானசேகரன்

Updated on
1 min read
பட்டதாரி   என்றாதல்   பவித்திரமாம் ; கல்லாமல்விட்டுவிட   பின்னாளில்   வேதனையே ! ---- நட்டமுறக்காண்பதைத்   தவிர்ப்பதுவே   கடமையென   உணராமல்மாண்புதனை   இழக்கத்தகு   மா ?கல்விதரும்   சிறப்பெல்லாம்   காலத்தால்   அழியாதாம்,செல்வாக்கைத்   தருவததன்   சிறப்பாகும் ! ---- பல்கலையில்தேர்ந்துவிடக்   கிட்டுவதும்   தீர்க்கமின்றி   வேறில்லை ,வேறெதுதான்   இணையாகும்   விளம்பு !இளமைதனில்   கற்காமல்   இருந்துவிட   வாழ்க்கைக்களமதிலே   வெற்றிதனைக்   காணுவமோ ? ---- விளக்கமிதைஊட்டுவதே  அதன்பெருமை ,  உன்னதநற்   கல்விகற்றோர்நாட்டின்முது   கெலும்பென்றே   நம்பு !உற்றநற்   பலமென்றே   உலகவர்   ஏற்றதெலாம்கற்றிட்ட   நன்றானக்   கலவியையே ! ---- பெற்றிட்டசெல்வங்களில்   இன்னதுவே   சீர்பெருமை   மிக்கதெனஎல்லோரும்   கூறுவர்   இசைந்து !இளமதனில்   கல்வியதும்   எட்டிக்காய்   என்றாகும் ;உளமிதனைத்   தவறெனவே   உணரட்டும் ! ---- விளக்கமிதைஊட்டுவதே   பெற்றவர்தம்   உன்னதநற்   கடமை அதேமாட்சிதனைக்   கூட்டுவிக்கு   மாம் !உன்னதநற்   கல்வியதே   உயர்வூட்டும்   புகழ்கூட்டும் ;இன்னதனை   மனம்மறக்கா   திருக்கட்டும் ! ---- மன்னவராய்,இம்மண்ணை  ஆண்டவர்கள்  இருப்பிடங்கள்  தெரியவில்லைகம்பனுக்கு   இருப்பதனைக்   காண் !கல்வியெனும்   செல்வமது   கரையாதாம்   மறையாதாம்  ;எல்லையற்ற   புகழ்கூட்டும்   என்னாளும் ! ---- செல்வக்களஞ்சியத்தை   ஈட்டித்தரும் , காலமெலாம்   துணைநிற்கும் ;விளக்கமதை   மறப்பதுவும்   வீண் !கற்றறிந்த   அறிஞர்தமை  கலங்கரை   விளக்கமென்பார் ;உற்றநல்  அறிஞர்தமை   உலகறியும் ! ---- மற்றவர்போல்மட்டற்ற   புகழ்கண்டு   மன்றமதில்   தலைநிமிர்ந்திடபட்டதாரி   என்றாகப்   பார் !                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com