ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வழிதவறிய பயணங்கள்: ஆர்.அருண்குமார்

Updated On :14 நவம்பர் 2016, 10:40 am

வாழ்க்கைப் பாதைக்கு தேவை வழி 
வார்த்தை தவறினால் மாறிடும் விதி.
தாழ்வில்லா மனதுக்கு அமைதி தேடு
தவிப்பை போக்கிட இதுதான் நியதி. 

தனிமையே நம்மை மாற்றிடும்
தலைவிதி என்பது வீணே.
பதறினால் விழுவது மனம்தான்
பக்குவம் தேவை வாழ்விலே.

பயணித்தால்  ஆயிரம் அனுபவம்
பார்த்துதான் பழக வேண்டும்.
துயரமின்றி வசந்தம் வீசிட
தொல்லை அறவே தவிர்த்திடு.

அனுபவங்களை அசைபோட்டு
அன்பான வாழ்வுக்கு விதைபோடு.
மாறினால் உள்ளம் நொந்திடும்
மௌனம்தான் உமக்கு நிரந்தரம்.

வழிதவறி பயணித்தால் ல்ட்சிய
வாழ்வே திசைமாறிடும்.
மொழி தெரியா ஊமையாய்
முற்றும் திரிவது தேவையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.