அகரம் எழுதச்சொல்லி அந்த நாளில் அம்மா
அருமையாய் கைபிடித்து முயலும்போது
உகரம் ஊகாரம் என்றழுது ஓடிமறைந்தேன்
உருப்படாமல் போனநானும் கைநாட்டு ஆனேன்.
நடிகரின் சினிமாவில் மோகமும் தாகமும் கொண்டு
நாள்தோறும் படம்பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.
நடிப்பதே வாழ்வென்று நம்பிநான் நகரம் வந்து
நாலாந்தர மனிதனாகி வாழ்வின் ஓரம் கண்டேன்.
கட்டிய மனைவியின் அடிமையானேன் ; பெற்றோரைக்
காணநேர்ந்தால் வெறுத்தொ துக்கினேன் ; மனைவியின்
திட்டுக்கு அஞ்சி பாசமிகு மாதாபிதாவை இன்று
நட்டாற்றில் விட்டு நாணமின்றி பொய்யாய் வாழ்கின்றேன்.
கைகாட்டி மரமென வழியின் நின்றபெரியோர் சொன்ன
கருத்தையும் ஏற்காமல் காரிருளில் சென்றேன் ; இன்றோ
வழிதவறிய பயணமாய் ஆகிப்போன வாழ்வெனது ;
விழிபிதுங்கி நிற்கின்றேன்; வீணாகிப் போன நானும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

