மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

செல்லாக் காசு: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated On :21 நவம்பர் 2016, 11:28 am
நயமுடன்  கசப்பான  மருந்ததன்  மேலே          நாவிற்கு  இனிதான  சீனியிடல்  போலேசெயலாக்கும்  முறைதன்னை  விரிவாக  அலசி          சிறப்பான  வழிமுறையைக்  கண்டறிந்து  பின்னம்உயர்வான  வகைதன்னில்   ஏற்பாட்டைச்  செய்தல்          உன்னதம்  என்றாகும் ; இல்லாதப்  போதில்அயர்வடையச்  செய்திடும்  மக்களவர்  தம்மை          அதுநீர்க்கச்  செய்திடும்  திட்டமது  தனையே !கள்ளபணம்  கருப்புப்பணம்  இதனாலே--- ஒருபோதும்          கண்டிப்பாய்  ஒழியாதாம்  என்றுணர்க!உள்ளபடிப்  பார்க்கையிலே  கருப்புப்பணம்---மீண்டும்          உருவாகும்,  அதைதடுக்கத்  தான்தகுமோ?எள்ளளவும்  அதுமீண்டும்  நாட்டினிலே---வராமல்          இருக்கத்தான்  வேண்டுமென  வரிவிகிதம்உள்ளதிலே  பாதியென்றே  ஆகிடணும்---இதுவே           உன்னதமாம்  என்றரசும்  உணர்ந்திடணும்!முன்னமாய்த்  தீரவே  ஆய்ந்திடாமல்           முறையாய்  செயல்முறைப்  படுத்தாமல்இன்றிதைக்  கொணர்ந்ததும்  ஏன்தானோ           இன்னல்கள்  வந்ததை  யார்மறப்பார்?உன்னதத்  திட்டமாம்  என்றவர்கள்            உட்பட  அனைவரும்  குறைகண்டுஇன்றிதைப்  பழிப்பதை  யார்மறுப்பார்,            இதற்கென்ன  பதில்தன்னை  தரயியலும்?செல்லாதக்  காசாகிச்  சீரழியும்  ஆயிரங்கள்எல்லோரின்  கைகளிலும்  இருக்கிறதே---நல்விதமாய்மாற்றவழி  செய்யாமை  மக்கள்தமை  வருத்திடுதே!போற்றதக்க  செயல்முறையோ  புகல்!இடரில்லா  வகைதனிலே  எதுவொன்றும்  சுமூகமாய்நடந்திடக்  காண்பதே  நல்லாட்சி!---இடக்கானவழிமுறையைக்  கையாள  வருவதெலாம்  அல்லல்களே,மொழியட்டும்  பதிலதனை  மோடி!அலங்காரப்  பேச்சாலே   ஆட்சிக்கு  வந்தமோடிநலமழியக்  காண்கிறோம்  நாமின்று!--- குளருபடித்திட்டமதால்  மக்களுக்குத்  திண்டாட்டம்  தான்மிச்சம்;நட்டமுறக்  காண்கிறதே  நாடு!அவசரத்தில்  கொண்டுவந்த  அலங்கோலத்  திட்டமிதைஎவரின்று  போற்றுகிறார் , இல்லையென்பேன்!---தவறானசெயல்பாட்டு  முறையாலே  சிறப்பிழந்தே  நிற்பதென்ன?நயமில்லாச்  செயலெனுதே  நாடு!நல்லதொரு  திட்டமிது  என்றானப்  போதும்           நயமுறவே  நிறைவேற்றத்  தவறியதும்  வெட்கம்!வல்லவர்கள்  கோடிகோடி  கருப்புப்பணந்  தன்னை           வகையாக  வெளிநாட்டு  வங்கிகளில்  பதுக்க,அல்லல்பட்டு  உழைக்கின்ற  நடுத்தட்டு  மக்கள்           அவதியுறும்  வகைதனிலே  செயல்படுத்தத்  தகுமோ?செல்லாதவை  என்றானது  பணத்தாள்கள்  தானோ?           சிறப்பழியக்  கண்டிட்ட  மோடிகூடத்  தானே!மோடிதனின்  திட்டமதால்  முடங்கியதே  நாடு            முறையான  செயல்திறமை  இல்லைவெட்கக்  கேடு!நாடிதனின்  மக்களுக்கு  வேண்டாத  அலைச்சல்             நரேந்திர  மோடிக்கேன்  அசட்டுத்தன  துணிச்சல்?வேடிக்கை  என்றாச்சு  தந்தவாக்கு  எல்லாம்            விரக்திதனைக்  கண்டிட்டது  நாட்டுமக்கள்  உள்ளம்!கோடிகள்  ஐம்பத்து  ஐந்துலட்சம்  வருமா?            கொடுத்திட்ட  வாக்குறுதி  வாக்குகளைப்  பெறுமா?           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.