திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: பூ. சுப்ரமணியன்,

Updated On :24 அக்டோபர் 2016, 11:03 am
கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவியும் பாடியது அன்று  கவிஞர் வீட்டு ஜன்னல் நிலவும்கவிஞருடன் கவிதைபாடி மகிழ்ந்தது இன்று.அன்னை நிலாவைக் காட்டிகுழந்தைக்கு அமுதூட்டினாள்குழந்தையோ கைதட்டி சிரித்ததுஜன்னல் நிலாவைப் பார்த்து.விண்ணில் தவழ்ந்து வரும்கண்சிமிட்டும் வெண்ணிலாமண் குடிசை ஜன்னல் வழியேபுன்னகையுடன் எட்டிப்பார்த்தது!கண்சிமிட்டும் ஜன்னல் நிலாமண் குடிசை வீட்டைஎட்டிப் பார்க்கும் ஏழை வீட்டு கட்டணமில்லா மின்விளக்கு !ஓவியன் கைத் தூரிகையில்கவிஞர் பாடிய பாடலில்சிரிக்கும் வெண்ணிலாசிக்கியது ஜன்னல் நிலாவாகஎடுப்பான வெண்ணிலாஜன்னலுக்கு வெளியேதுடுப்பில்லாப் படகுபோல்  பிறை நிலாவாக சிரித்தது !ஜொலிக்கும் வெள்ளித்தட்டைஜன்னலுக்கு வெளியேவிண்ணில் வீசியது யார் ? !கவிஞர் கவிதையில் நிலவைக்கேட்டு உள்ளம் மகிழ்ந்தான் !வீட்டில் அடைபட்டக் காதலன்காதலியின் முகம் காண  காதலில் ஏங்கி நின்றான்ஜன்னல் நிலாவில் காதலி  முகம் கண்டு மகிழ்ந்தான் !                              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.