என் ஓட்டம் என் இலக்கென ஓடும் பயணத்தில்
தூரங்களும், பாதைகளும் வெவ்வேறென்றாலும்
ஆரம்பமும், முடிவும் ஒன்றுதான்.
சிலருக்கு தொடங்கியவுடன் முடியும் பயணம்,
பலருக்கோ பாதியில் முடியும்.
இன்னும் சிலருக்கோ களைத்து சோர்வுறும்
வரையில் தொடரும்.
ஒருவழிப் பாதையில் திரும்பிப் பார்க்க முடியும்,
ஆனால் வந்த பாதையில் திரும்பவும்
பயணிக்க முடியாது.
எல்லாம் இருந்தும், இலக்கை அடைந்தும்,
ஏக்கத்துடன் முடியும் பயணங்கள் சில.
எதுவுமே இல்லையென்றாலும், இலக்கை
எட்டவில்லையென்றாலும் திருப்தியுடன்
முடியும் பயணங்கள் பல.
இலக்கை அடைய நேரான பயணங்களும் உண்டு,
குறுக்கு வழிப் பயணங்களும் உண்டு.
பயணத்திற்கும், ஓடுவதற்கும்
அனைவருக்கும் கிடைக்காத
வாய்ப்பு கிடைத்தமைக்கு பிரதி பலனாக
என் ஓட்டம், என் இலக்கு என்னும் பயணம்
முடிவதற்குள் தானும் வாழ்ந்து
பிறரையும் வாழவைப்பதே சிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

