நீ கண் சிமிட்டினால்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

நீ முகம் பார்க்கும் கண்ணாடி
யாயென திருவிழி களுன்முன்
நிலைகுலையாது நிற்கின்ற
பாக்கியம் கிட்டிட ஆசிக்கிறேன்
நீ கண் சிமிட்டினால் போதும்
பச்சை க்கொடி யெனவாகுமே

நீ பிறந்த வீட்டிற்கு விடைக்கூறவுன்
வருகைக்காய் வரவேற்க கால் 
கடுக்க காத்திருக்கும் புகப்போகும்
வீடென்றன் இதயமாய் இருந்திடக் 
கூடாதா என்றேங்கி நிற்கு மெனை 
யேற்க நீ கண் சிமிட்டினால் போதும்
காலங்கா லமானாலும் காப்பேனடி

நினைப்பது நடந்துவிட்டால் நீ
காதலக்கு கிடைத்த விருந்தென
எண்ணினா லென்னிலும் மூடன் 
வேறெவனு மிருக்க மாட்டான் 
காதல் நோய்க்கு கிடைத்திட்ட வரு
மருந்தென கொண்டிடுவேனடி
நீ மட்டும் கண் சிமிட்டினாலே

வாய்த் திறந்து வார்த்தைப் பேச
வாக்குப் பிழையாகிடுமோ வென
மனம் திறந்து பேசுகிறேன் அவ்
வலைகளுன் காதில் வந்து தூது
சொல்ல நீ கண் சிமிட்டினால் உளம்
மகிழும் மகிழ்வுக்கு குறைவேது

கனவினில் கண்டவளை யென்
நினைவி லிருந்து விலக்கவோ
வெருக்கவோ செய்யு மதிகாரம்
இவ்விருப்பியால் எழுதவில்லை
எழுதினாலும் பிரம்ம னவனதை
அவனோடு போராடி மீட்ப்பேனடி 
சற்றே நீ கண் சிமிட்டினால் போதும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com