திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்:  கவிஞர் ராம்க்ருஷ்

Updated On :18 ஜூன் 2018, 9:30 am
செயற்கை உணவு முறை எங்கும் நிறைந்திருக்குஅயர்வுண்டாக்கி ஆளைக் கீழே வீழ்த்தும் செருக்குஉயர்வுண்டாக உடல் வளத்தில் உறுதி பெருக்குஇயற்கை உணவே இனிய உணவென பிடி இறுக்குஎதிர்கால சந்ததிக்கு ஊறு விளைக்கும் செயல்களைமுதிர்ந்த அறிவோடு தடுத்து நிறுத்திட முயன்றிடுஉதிர்ந்த தீயவைகளை இனியேனும் விலக்கிடஅதிர்வின்றி அச்சமின்றி மிச்சத்தையேனும் மீட்டிடுஎங்கும் குடி எப்போது குடி என்று பாமர மக்கள்சங்கு ஊதிடச் சாகும் நிலை மாற்ற குடி கெடுத்திடும்அங்கிங்கெனாதபடி தோன்றி முளைத்த கடைகளைதங்குதடையின்றி அடைத்தே குடிகாரர்கள் வளராதுவளர்ந்தவர் தொடராது வளமான எதிர்காலம் காணஅளந்து பார்க்கும் நிதிநிலைக்கு மாற்று கண்டாவதுபிளந்து நிற்கும் இளந்தலைமுறை இளைஞர்களைஉளம் மாறாமல் மிச்சமானவர்களை மீட்போமேஉடல்நிலை கெடுக்கும் உயிர் வாங்கித் தொழிற்கூடம்கடல்நிறைய செல்வம் வேலை தந்தாலும் வேண்டாம்மடல்நிறைய மனு எழுதி மக்களுக்காக என அதனைதிடமனதோடு எதிர்த்துநின்று மிச்சத்தை மீட்போமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.