சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 6

இறைவன் சிவபெருமான் உயிர்களுக்கு செய்யும் அருளுதவியாகிய திருவருள் இங்கே கொள்ளி விளக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On :2 நவம்பர் 2015, 12:13 pm

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும்
அரங்கிடை நூல் அறிவாளர் அறியப் படாததோர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

இறைவன் சிவபெருமான் உயிர்களுக்கு செய்யும் அருளுதவியாகிய திருவருள் இங்கே கொள்ளி விளக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் செய்யும் இந்த உதவி உயிர்கள் அறிய முடியாதபடி மறைந்து இருப்பதால் கரந்தன கொள்ளி விளக்கு என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, கறங்குதல் = சுழன்று ஆடுதல். முழக்கு = ஒலி. பயின்றரியாத பாட்டு = வெகு சிலரால் மட்டும் கற்கப்பட்டு, பலரும் அறியாத பாடல் அதாவது இசையுடன் பாடப்படும் சாம வேத கீதம்.

பொழிப்புரை

மறைந்து நின்று உயிருக்கு உயிராய் நின்று உதவி செய்யும் திருவருளை உடையவரும் சுழன்று ஆடுகின்ற துடி என்னும் இசைக்கருவி எழுப்பும் ஒலியை உடையவரும், எல்லா இடங்களிலும் பரந்து இருக்கும் பதினெண் கணங்களை உடையவரும், மிகவும் குறைவான சிலரே அறிந்து பாடக்கூடியதும், பலரும் அறியாத சாம வேத கீதத்தை உடையவரும், கூத்தாடும் அரங்குகளில் பயிற்றுவிக்கப் படாத நடனத்தை ஆடுபவராக உடையவரும், நிரந்த கெடிலப் புனலைத் தனது தீர்த்தமாகிய உடையவரும் ஆகிய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.