கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே

விளக்கம்

தான் கருவாகக் கிடந்தபோதே சிவபிரானின் பாதங்களைத் தொழும் கருத்தினை உடையவனாக இருந்ததாக திருநாவுக்கரசு நாயனார் இங்கே குறிப்பிடுகின்றார். அவரது பெற்றோர்கள் இருவரும் சைவவேளாளர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இல்லற நெறி வழுவாமல் அனைவரிடமும் அன்பு கொண்டு ஒழுகினார்கள் என்றும் பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. மேலும் அவாது தமக்கையார் திலகவதியாரும் சிவநெறியில் பற்று உள்ளவராய்த் திகழ்ந்ததை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் மருள்நீக்கியாரை கருவுற்ற காலத்தே, அவரது தாய் மாதினியார் சிவபிரானைப் பற்றிய சிந்தனையில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான், தான் கருவாக இருந்த காலத்தே சிவபிரானின் சிந்தைனையோடு இருந்தததாக இங்கே குறிப்பிடுகின்றார்.

தாய்மைப் பேறு காலத்தில், அன்னைமார்கள் நல்ல சிந்தனையுடன் இருப்பது, கருவிலிருக்கும் குழந்தையின் மனப் பக்குவத்திற்கு மிகவும் நல்லது. கருவில் இருக்கும் குழந்தையின் புற உறுப்புகள் வளர்வது போல், குழந்தையின் அக உறுப்பான மனமும் விரிவடைகின்றது. மகாபாரதத்தில், சுபத்திரை கருவுற்ற காலத்தில், கண்ணனும் அர்ஜுனனும், சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பது பற்றி பேசிக் கொண்டிருந்த பேச்சுகளை, கருவாக இருந்த அபிமன்யு கேட்டதன் மூலம், அவன் சக்கர வியூகத்தை உடைக்கும் வழியினை அறிந்தான் என்று கூறப்படுகின்றது. தான் கருவில் இருந்த போதே சிவபிரானின் திருப்பாதங்களை நினைத்து இருந்ததாக அப்பர் பிரான் கோவாய் முடுகி என்று தொடங்கும் பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (4.96.5) கூறுகின்றார்.

கருவுற்று இருந்து உன் கழலே நினைத்தேன் கருப்புவியில்

தெருவில் புகுந்தேன் திகைத்து அடியேனைத் திகைப்பு ஒழிவி

உருவில் திகழும் உமையாள் கணவா விடில் கெடுவேன்

திருவில் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

கருவாக இருந்த காலத்தில் வேறு எதையும் காண முடியாத நிலையில் சிவபிரானை நினைந்து இருந்த தான், கருவில் இருந்து விடுபட்டு வெளியே வந்த பின்னர், உலகத்தில் உள்ள பொருட்களைக் கண்டு திகைத்து நின்றதால் உலகியல் பொருட்கள் மீது பற்று கொண்டதாகவும், அந்த திகைப்பினை ஒழித்து உலகப் பற்றினை நீக்கவேண்டும் என்று இங்கே இறைவனிடம் அப்பர் பிரான் வேண்டுகின்றார்.

தான் கருவில் கிடந்த நாள் முதலாக சிவபிரானின் திருப்பாதங்களைக் காண்பதற்கு தனது மனம் உருகியதாக, கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் (நான்காம் திருமுறை, பதிக எண் 99) பாடல் ஒன்றில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன்

திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா

ஒரு பற்று இல்லாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

சிவபிரானின் அருள் இருந்தமையால், கருவாகக் கிடந்த போது அவனது திருப்பாதங்களை நினைத்து இருந்த தான், ஒரு உருவமாக உலகில் தோன்றிய பின்னர் சிவபிரானின் நாமத்தைப் பயின்றதாக இங்கே கூறுகின்றார். பயிலுதல் என்றால் இடைவிடாது ஒரு செயலைச் செய்தல் என்று பொருள். கல்வி பயிலுதல் என்று சான்றோர்கள் கூறுவதன் பொருள், கல்வி என்பது கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ முடியக் கூடிய ஒன்றல்ல. வாழ்க்கை முழுவதும் இடைவிடாது நடைபெறும் செயல் ஆகும்.

மணிவாசகரும் தனது திருவாசகம் (கண்டப்பத்து என்ற பதிகத்தில்), உருத் தெரியாமல் தான் கருவில் இருந்த காலத்திலேயே, சிவபிரான் தனது உள்ளத்தில் புகுந்ததாக கூறுகின்றார்.

உருத்தெரியா காலத்தே உள்புகுந்து என் உளம் மன்னிக்

கருத்து இருத்தி ஊன்புக்கு கருணையினால் ஆண்டு கொண்ட

திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை

அருத்தியினால் நாயடியேன் அணி கொள் தில்லை கண்டனே

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தில், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் நாக்கினை புகழ்ந்து கூறும் அப்பர் பிரான், இங்கே நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் வாயினை திருவாய் என்று அடைமொழியுடன் சிறப்பிக்கின்றார். பொலிதல் என்றால் அழகுடன் விளங்குதல் என்று பொருள். சிவபிரானின் நாமத்தை நாம் சொல்வதால் நமது வாய் அழகு பெற்று விளங்கும் என்ற கருத்தும் இங்கே கூறப்படுகின்றது. நாம் எப்படி திருநீறு இட்டுக் கொள்வது என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். சிவாய நம என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு, திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். நமச்சிவாய என்ற மந்திரத்தைச் சொல்லி திருநீறு அணிந்தால், நமது நோய்களும் வினைகளும் நெருப்பில் இடப்பட்ட விறகு போல் வெந்து சாம்பலாக மாறிவிடும் என்று ஒரு பொதுப் பதிகத்தில் (நான்காம் திருமுறை பதிக எண் 77 பாடல் 4).

சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி

அந்தரத்து அமரர் பெம்மான் நல் வெள்ளூர்தியான் தன்

மந்திர நமச்சிவாயவாக நீறு அணியப் பெற்றால்

வெந்து அறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகு இட்டன்றே

மனம், மொழி, மெய்களால் (உடலினால்) இறைவனை வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பாடலில் மூன்று வகையான வழிபாடுகளும் சொல்லப்பட்டுள்ளன. மனத்தால் நினைந்து, வாயினால் அவனது நாமத்தை சொல்லி, உடலில் திருநீறு அணிந்து சிவபிரானை வழிபடுதல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்ற பொருள் கொண்டு, சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் சிவபிரானது தன்மைகளை ஆராய்ந்து தெரிந்து கொண்டு அவனது திருநாமங்களை இடைவிடாது பல பதிகங்கள் மூலம் எடுத்துரைத்த செய்கையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவார்கள்.

பொழிப்புரை

பாதிரிப்புலியூர் தலத்தில் வீற்றிருக்கும் அரனே, நான் கருவாகக் கிடந்த நாளில் உனது திருப்பாதங்களை நினைக்கும் கருத்துடன் இருந்தேன்; உலகினில் பிறப்பெடுத்த நான், உனது அருள் கூடிய காரணத்தால், உனது திருநாமங்களைத் தெரிந்து கொண்டேன்; மேலும் அத்தகைய நாமங்களை இடைவிடாது சொல்லலுற்றேன்; வாயார சிவாயநம என்ற மந்திரத்தினைச் சொல்லி எனது உடலில் திருநீறு பூசிக் கொண்டேன். நீ எனக்கு சிவநெறியினை அருள வேண்டும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யாராலும் கொடுக்க முடியாத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா்! பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை