திருந்தா அமணர் தீநெறிப் பட்டுத் திகைத்து முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் எரித்தாய் பாதிரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்று கொள்ளே

விளக்கம்

பொருந்தா அரக்கன் = தன்னுடைய சிவபக்திக்கு சற்றும் பொருந்தாத கயிலை மலையை பேர்த்தெடுக்கும் செயல். எரித்தாய் என்ற சொல் இங்கே அழித்தாய் என்ற பொருளைத் தரும். இராவணின் வலிமையை அடக்கிய செயல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்று கொள்ளுதல் = தாங்கிக் கொள்ளுதல்

பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே அருளாளர்களின் நோக்கமாக இருந்து வருகின்றது, அனைத்து உயிர்களும் உண்மையில் விரும்புவது அதனைத் தான் என்றாலும், நமது ஆன்மாவின் தாகத்தை நாம் சரியாக உணராததால், உடலின் விருப்பத்தை (ஐம்புலன்களின் ஆட்சியால் கட்டுண்டு இருக்கும் உடலின்) நிறைவேற்றவே நாம் அனைவரும் முயற்சி செய்கின்றோம். ஆனால் அப்பர் பிரான், தனது உயிரின் உண்மையான விருப்பத்தை உணர்ந்தவர்; ஆதலின் இங்கே பிறவாத வரம் வேண்டுகின்றார் புழுவாய்ப் பிறக்கினும் உனது நினைவு மறவாமல் இருக்கவேண்டும் என்று வேண்டுவதன் நோக்கமும், பிறப்பு என்பது ஒன்று இருந்தால், அந்தப் பிறவி எதுவாக இருப்பினும் இறைவனின் நினைவோடு வாழ்ந்து, இனிமேலாவது பிறவாமைக்கு வழி செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான்.

இதுவரை நாம் எடுத்த பிறவிகள் எத்தனை என்று நாம் அறியோம். அதனால் தான் மணிவாசகப் பெருமான் திருவாசகம் சிவபுராணத்தில், எல்லாப் பிறவியும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று தனது நிலையினைக் கூறுகின்றார். மேலும் நீத்தல் விண்ணப்பத்தின் முதல் பாடலில், தன்னைத் தாங்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றார். இனி பிறவி ஏதும் எடுக்காத வகையில் சிவபிரான் தன்னுடன் இணைத்துக் கொள்வதையே தாங்கிக் கொள்ளுதல் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய் விரல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே

அப்பர் பிரானும் சிவபிரானிடம், சிவபிரானின் கடன் தன்னைத் தாங்குதல் என்றும் தனது கடன் அவனுக்குத் திருப்பணி செய்தல் என்றும் கூறுகின்றார்.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக் கரக்கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே

பொழிப்புரை

மனம் திருந்தாமல் இருக்கும் சமணர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் சொற்களில் மனம் மயங்கி இருந்த நான், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு முக்தி அளிக்கும் திருவடிகள் உனது திருவடிகள் தான் என்பதை உணர்ந்து உன்னைச் சரணடைந்தேன். தனது நிலைக்குச் சிறிதும் பொருந்தாத வகையில் கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த இராவணனின் வலிமையை அடக்கியவனே, திருப்பாதிரிப்புலியூர் நகரில் உறையும் சிவபிரானே, நான் இனிமேல் பிறவாதவாறு நீ என்னைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.

முடிவுரை

பாதிரிப்புலியூர் அரனை வணங்கி பதிகம் பாடிய பின்னர், அப்பர் பிரான் திருவதிகை புறப்பட்டார். செல்லும் வழியில் திருமாணிக்குழி மற்றும் திருத்தினை நகர் தலங்களுக்குச் சென்ற பின்னர் திருவதிகை அடைந்த அப்பர் பிரானை, திருவதிகை நகரில் இருந்த மாந்தர்கள் பூக்களும் சுண்ணமும் தூவி, நகரினை அலங்கரித்து வரவேற்றனர். திருவதிகை வீரட்டானத்து இறைவனை புகழ்ந்து பல பதிகங்கள் பாடியபடி அப்பர் பிரான் சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். இதனிடையில் பல்லவ மன்னன், சமணர்களின் மொழிகள் பொய் என்பதை உணர்ந்து, சமண சமயத்தின் மீது தான் கொண்டிருந்த பற்றினை ஒழித்து சைவ சமயம் சார்ந்தான். மன்னனின் ஆதரவினை இழந்த சமணத் துறவிகள் பல்லவ நாட்டினை விட்டு நீங்கினார்கள். சமணர்கள் தங்கியிருந்த பாழிகள் இடிக்கப்பட்டு, அந்த கற்களைக் கொண்டு திருவதிகை நகரில் குணபரவீச்சரம் என்ற பெயரில் சிவபிரானுக்கு ஒரு கோயில் கட்டினான். இந்த செய்தியினைக் கூறும் பெரிய புராணப் பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

புல்லறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல் அமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்
வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் எடுத்தான்

திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு குகைக்கோயிலில் காணப்படும் வடமொழியில் காணப்படும் ஒரு கல்வெட்டில், பல்லவன் மன்னன் சைவ மதத்திற்கு மாறிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குகையில் கங்காதரர் உருவம் புடைச் சிற்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யாராலும் கொடுக்க முடியாத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா்! பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை