பாடல் 5:
பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே
பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானே
நீலமாமணி கண்டத்து எண் தோளானே
நெருநலையாய் இன்றாகி நாளையாகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
விளக்கம்:
பிறப்பில்லாத பெருமான் என்றும் நிலையாக ஒரே கோலத்தில், மூப்பு அடையாத குழகனாக இருப்பதால் அவனை பாலனாக கண்டவர் எவருமில்லை. மற்ற பல தெய்வங்களின் குழந்தை விளையாட்டுகளை குறிப்பிட்டு பாடல்கள் பல இலக்கியங்களில் காணப்படுகின்றன. மேலும் பிள்ளைத் தமிழ் நூல்களும் உள்ளன. ஆனால் சிவபெருமான் மீது பிள்ளைத் தமிழ் எவரும் இயற்றவில்லை. இந்த நிலையைத் தான் அப்பர் பிரான் இங்கே, பாலன் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே என்று இங்கே உணர்த்துகின்றார். நெருநல்=நேற்று .
பொழிப்புரை:
குழந்தைப் பருவம் முதலான பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே, தன்னை வழிபடும் அடியார்களுக்கு பற்றுக்கோடாக விளங்குபவனே, விடத்தினை அடக்கியதால் நீலமாமணி பதித்தது போன்று தோன்றும் கழுத்தினை உடையவனே. எட்டு தோள்களை உடையவனே, நேற்று இன்று நாளை எனப்படும் மூன்று காலங்களாகவும் இருப்பவனே, சிவலோக நெறியினை அடியார்களுக்கு அளிக்கும் பண்பினைக் கொண்டவனே, புகழத்தக்க பண்புகளை உடையவனே, நுண்ணிய அறிவினை உடையவனே, நல்லொழுக்க குணங்களை உடையவனே, பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ, மேற்கண்ட குணங்களை எல்லாம் கொள்வதற்கு முன்னோ பின்னோ, நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


