திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

102. முரசதிர்ந்து எழுதரு  - பாடல் 3 

பெருமானைப் போன்று

News image
Updated On :17 ஜூலை 2018, 10:00 am


பாடல் 3:

    முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
    மழவிடை அது உடையீரே
    மழவிடை அது உடையீர் உமை வாழ்த்துவார்
    பழியொடு பகை இலர் தாமே

விளக்கம்:

இடபம், ஊர்தியாகவும் கொடியில் உள்ள இலச்சினையாகவும் இருக்கும் இரண்டு நிலைகளையும் உணர்த்தும் பொருட்டு உடையீர் என்று பொதுவாக கூறுகின்றார். இம்மையில் ஏற்படும் பழியினால் மறுமையில் அந்த உயிர்களுக்கு இடையில் பகை வரும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது என்ற விளக்கம் அளிக்கப் படுகின்றது. பகை என்ற சொல்லுக்கு பாவம் என்ற பொருளும் சிலரால் கூறப்பட்டு விளக்கம் அளிக்கப் படுகின்றது. முழவு=மத்தளம் போன்ற இசைக்கருவி. மழவிடை=இளமையான இடபம், பெருமானைப் போன்று என்றும் இளமையுடன் இருப்பது இடபம்.  

பொழிப்புரை:

முழவம் எனப்படும் இசைக்கருவி ஒலிக்கப் படுவதும், சோலைகள் சூழ்ந்ததால் அழகினை உடையதாக இருப்பதும் ஆகிய முதுகுன்றம் தலத்தில் பொருந்தி உறையும் இறைவரே, இளமையான காளையைத் தமது வாகனமாக உடையவரே, இளமை வாய்ந்த இடபத்தினை வாகனமாக உடைய உம்மை வாழ்த்தி பாடும் அடியார்கள் பழிகளும், பழிகளால் ஏற்படும் பகைகளும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.