திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

100. படையார் தருபூதப் - பாடல் 10

புத்தர் மற்றும் சமணர்

News image
Updated On :30 ஜூன் 2018, 6:30 pm

பாடல் 10:

    புத்தர் அருகர் தம் பொய்கள் புறம் போக்கிச்
    சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும்
    நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வாய
    அத்தன் அறவன் தன் அடியே அடைவோமே

 
விளக்கம்:

சுத்தி தரித்து=உயிர்களை தூய்மை செய்து; அருகர்=சமணர்கள்; அருகக்கடவுளை போற்றி வணங்குவதால் அவர்களுக்கு அருகர் என்ற பெயர் வந்தது. புத்தர் மற்றும் சமணர் கூறும் உரைகளால் களங்கம் ஏதும் அடையாமல் தூய்மையாக இருப்பவன் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சமணர்களும் புத்தர்களும் பெருமானைக் குறித்து கூறும் இழிவான சொற்கள் உண்மையை ஆதாரமாகக் கொண்டிருந்தால் பெருமானுக்கு களங்கம்  ஏற்படும். அவ்வாறின்றி பொய்யினை ஆதாரமாகக் கொண்ட சொற்களால் களங்கம் எவ்வாறு விளையும். அத்தன்=தலைவன்

பொழிப்புரை:

புத்தர்கள் மற்றும் சமணர்கள் கூறும் பொய்யான சொற்களை பொருட்படுத்தாமல் புறத்தே தள்ளி விலக்கியதுமன்றி, அத்தகைய சொற்களால் களங்கம் ஏதுமின்றி தூய்மையின்  வடிவமாக இருப்பவன் பெருமான். ஒளி வடிவினனாக இருக்கும் பெருமான், உமை அம்மையுடன் கூடி நித்த மணாளனாக எருக்கத்தம்புலியூர் தலத்தில் விளங்குகின்றான். அத்தகைய தலைவனும் அறத்தின் வடிவமாக இருப்பவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை சென்று அடைந்து நாம் பயன் பெறுவோமாக.

Audio

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.