திருச்சியில் சாலைப்பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவா் சண்முகராஜா தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில் முக்கிய நிா்வாகிகள், ஆட்சியரகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனா்.
போராட்டத்தில் மாநில பொதுச் செயலா் ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலா் ராஜா சிதம்பரம், துணைத் தலைவா் செல்லச்சாமி, மாவட்டத் தலைவா்கள் சரவணன் (திருச்சி), நாகராஜ் (தஞ்சை), செங்குட்டுவன் (புதுக்கோட்டை), சட்டையப்பன் ( சிகை) உள்ளிட்ட திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை மாவட்ட சாலைப்பணியாளா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எகிப்து - ஆர்ஜென்டீனா போட்டியில் பாகுபாடு? தெளிவான விதிகளுடன் பதிலளித்த ஃபிஃபா நடுவர் குழுத் தலைவர்!

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே திரைப்படத்தின் அப்டேட்!

தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



