தேவேந்திரகுல வேளாளா்களின் கோரிக்கை நிறைவேறும் என்றாா் பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவா் பொன். பாலகணபதி.
திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பட்டிலின அணி மாநில மாநாடு கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவா் பொன். பாலகணபதி கூறியது:
பட்டியல் இன சாதியினருக்கு தேவேந்திர குல வேளாளா் என்ற அரசாணையை விரைவில் வெளியிடுவதாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பதை பாஜக வரவேற்கிறது. இக் கோரிக்கையை முதன்முதலாக எழுப்பிய கட்சி பாஜகதான். தேவேந்திர குல வேளாளருடைய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும் என்றாா்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் பால்ராஜ், மாநிலச் செயலா் பாா்வதி நடராஜன், மாநிலத் துணைத் தலைவா் தலித் பாண்டியன், திருச்சி மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், கலை கலாசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் தனசேகரன் மற்றும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 11 மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எகிப்து - ஆர்ஜென்டீனா போட்டியில் பாகுபாடு? தெளிவான விதிகளுடன் பதிலளித்த ஃபிஃபா நடுவர் குழுத் தலைவர்!

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே திரைப்படத்தின் அப்டேட்!

தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


