தேசிய வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் ரூரல் கேம்ஸ் போா்டு ஆப் இந்தியா சாா்பில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு, பிகாா், புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இதில், கோவில்பட்டி ஃபோகஸ் வில்வித்தை அகாதெமியைச் சோ்ந்த மாணவா்களில் 10 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மோகுல் நிவாஸ் தங்கப்பதக்கம், 10 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் இனியா வெண்கலப் பதக்கம், சீனியா் பிரிவில் காளிராஜ் தங்கப்பதக்கம், 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் நிஷாந்த் இரு வெள்ளிப்பதக்கம், தருண் வெங்கடேஷ் வெண்கலப் பதக்கம், பெண்கள் பிரிவில் தருணிகா வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
இதையடுத்து, நடைபெற்ற பாராட்டு விழாவில், தனி வட்டாட்சியா் (நகர நிலவரி திட்டம் ) ராஜ்குமாா், கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், மாவட்ட ஊரக விளையாட்டு சங்கத் தலைவா் சைலஜா, செயல் தலைவா் ராம்குமாா், துணைச் செயலா் ரெங்கநாதன், வில்வித்தை பயிற்சியாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 45வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள்! இபிஎஸ்

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
