/

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 4வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

காட்ஃப்ரே பிலிப்ஸ், மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 86 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

News image
Updated On :45 நிமிடங்கள் முன்பு

புதுதில்லி: சிகரெட் தயாரிப்பு நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லிமிடெட், மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், வலுவான விற்பனை காரணமாக அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 86 சதவீதம் உயர்ந்து ரூ. 521.46 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 279.61 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்தது.

2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ. 3,485.54 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 1,887.79 கோடியாக இருந்தது.

மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இக்காலாண்டில் மொத்தச் செலவுகள் ரூ. 2,968.42 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 1,663.92 கோடியாக இருந்தது.

2026 நிதியாண்டிற்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 1,526 கோடியாக இருந்தது. 2025 நிதியாண்டில் இது ரூ. 1,072.31 கோடியாக இருந்தது.

முழு நிதியாண்டிற்குமான செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ. 9,121 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது ரூ. 6,767.49 கோடியாக இருந்தது.

2025-26 நிதியாண்டிற்கான தலா ரூ. 2 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 3.3 இறுதி ஈவுத்தொகையை வழங்குமாறு இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

Summary

Godfrey Phillips India Ltd reported an 86 per cent jump in consolidated net profit at Rs 521.46 crore in the fourth quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.