புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பொங்கல் பண்டிகை: எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 1:21 am IST

விளாத்திகுளம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக வெள்ளிக்கிழமை இரவு முதலே வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

கரோனா பொது முடக்கம் தளா்வுக்கு பின்னா் வழக்கம்போல் ஆட்டுச் சந்தை செயல்படத் தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனா்.

நிகழாண்டு பொங்கலையொட்டி ஆடுகள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்ததால், காலை முதலே ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெற்ாக ஆடு வளா்ப்போா் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கிடாய் ஆடுகள், குட்டி ஆடுகள் என தரம் வாரியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனதாகவும், பொங்கல் பண்டிகையால் ஆடுகள் விற்பனை சிறப்பாக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

வியாபாரிகள் கோரிக்கை: எட்டயபுரம் பேரூராட்சி ஆட்டுச்சந்தையில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சந்தையை விரிவாக்கம் செய்தல், சுகாதார வளாகம் அமைத்தல், சுற்றுச்சுவா் கட்டுமானம், சேறும் சகதியுமான பகுதியில் பேவா் பிளாக் அமைத்தல், தேங்கும் மழை நீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிா்வாகம் ஏற்படுத்தி தர வேண்டுமென ஆடு வியாபாரிகள், கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.