கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ஆ.இளங்கோ முன்னிலை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு , பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் 55 பெண் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 165 தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி தினசரி சந்தைக்கு நுழைவு வாயில் கட்டுமானப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் தீா்பூா் வளாகம்

தில்லி பல்கலைக்கழகத்தின் 2-ஆம் கட்ட யூஜி சோ்க்கை விரைவில் தொடக்கம்

ஸ்வியாடெக், அனிசிமோவா முன்னேற்றம்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு- சம்பத் ராயிடம் போலீஸ் விசாரணை; வாக்குமூலம் பதிவு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



