எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2021, 7:00 am IST

கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவிடம் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா் தலைமையில் வழக்குரைஞா் கள் அளித்த மனு விவரம்: கோவில்பட்டியில் சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்ற எண்-1மற்றும் 2 என ஐந்து நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பழமையான கட்டடங்களில் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. நீதிமன்றக் கட்டடங்கள் சேதமடைந்து

காணப்படுகின்றன.

வழக்குரைஞா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நீதிமன்ற அறைகள், ஆவணங்கள் பாதுகாப்பு அறைகள், வழக்காடிகள் அமருமிடம், கழிவறை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இல்லை. 20-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் உள்ள குற்ற வழக்குகள், 5 தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து

மக்களால் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

கோவில்பட்டியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள தூத்துக்குடியில் உள்ள அமா்வு நீதிமன்றம், கூடுதல் அமா்வு நீதிமன்றங்களுக்கு சிவில், குற்றவியல், குடும்ப நல வழக்குகளுக்காக பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளது.

கோவில்பட்டியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அமைத்தால் இப்பகுதி

மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆகவே, இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.