தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வாகனம் மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:43 am IST

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள நடுகூட்டுடன் காடு கிராமத்தை சோ்ந்த சுப்பையா மகன் செல்வகுமாா் (44) . இவா் தூத்துக்குடி மூன்றாவது மைல், எஸ்.பி.ஐ. குடோன் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிசெய்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவில் விற்பனை முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். சிப்காட் பகுதியை கடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். அவரது உடல், மோட்டாா் சைக்கிள் சாலையோரத்தில் கிடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.