தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 104 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்ததாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 785 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 9,420 ரொக்கம் கைப்பற்றப்பட்டது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


