அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நஞ்சுண்டது ஏனோ?

திருவான்மியூர் தலம் குறித்த சம்பந்தப் பெருமானின் தேவாரப் பாடல் இது. இரண்டாம் திருமுறையில் வரும் இந்தப் பதிகத்தில் வினா உரையாக கேள்வி கேட்பதாய் அமைந்து, சிவ பெருமானின் தன்மையை வெளிப்படுத்துகிறார் சம்பந்தர்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 4:10 pm IST

திருவான்மியூர் தலம் குறித்த சம்பந்தப் பெருமானின் தேவாரப் பாடல் இது. இரண்டாம் திருமுறையில் வரும் இந்தப் பதிகத்தில் வினா உரையாக கேள்வி கேட்பதாய் அமைந்து, சிவ பெருமானின் தன்மையை வெளிப்படுத்துகிறார் சம்பந்தர்.

சிவபெருமானின் திருவிளையாடல்கள் பல. பெருமான் உலகைக் காக்க, தான் நஞ்சை உண்டு, தேவர்க்கு அமுதத்தை அளித்தார். அந்தத் தன்மையை உலகோர்க்கு எடுத்துரைக்கும் சம்பந்தர், அதையே வினாவாக இறைவனிடம் கேட்பதுபோல், அவர் பெருமையைச் சொல்கிறார் இவ்வாறு.

மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச்

செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்

துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்

வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

-"மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும் அழகிய மாளிகைகளையும் உடையதாக, இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாக விளங்குகிறது திருவான்மியூர். இவ்வூரில் எல்லோரும் உறங்கும் காரிருள் மண்டிக் கிடக்கும் இரவுப் பொழுதில், ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய் இலங்கும் இறைவரே! கரிய விஷத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ சொல்வீர்...'' என்று வினவுகிறார் சம்பந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.