அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பொங்கல் பொருள்கள் வருகை: வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகையையொட்டி சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 8:17 am IST

பொங்கல் பண்டிகையையொட்டி சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நகரின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டித் தெருவில் மளிகை, எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான பொருள்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மண்டித் தெருவில் அதிக அளவில் நிற்பதால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அதேசமயம், வேலூா் மாநகராட்சியில் சீா்மிகு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் மண்டித்தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களின் துண்டுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. இதன் காரணமாகவும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க, மரத் துண்டுகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.