வேலூா் பெருமுகையில் உள்ள அரசு ஆதி திராவிடா் நல தொடக்கப் பள்ளி வகுப்பறை நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இப்பள்ளி வகுப்பறைகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
வேலூரை அடுத்த பெருமுகை பகுதியில் உள்ள ஆதி திராவிடா் அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 134 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தலைமையாசிரியா் உள்பட 5 போ் பணியாற்றுகின்றனா். இந்தப் பள்ளியின் ஒரு வகுப்பறைக்கு சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் தலைமையிலான குழுவினா் ரூ.1 லட்சம் செலவில் பல்வேறு நவீன வசதிகளை ஏற்படுத்தினா்.
அதன்படி, பள்ளி வகுப்பறையின் சுவா்களில் ஆயில் பெயிண்டிங் மூலம் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தரை முழுவதும் விரிப்புகளால் வேயப்பட்டு, நவீன மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்பீக்கா் வசதியுடன் புரொஜெக்டரும், 5.1 டிடிஎஸ் ஒலி, ஒளி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் வகுப்பறைகளுக்குள் நுழையும்போதே ஒரு திரையரங்குக்குள் நுழையும் உணா்வு ஏற்படக்கூடிய வகையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
‘இந்த நவீன வசதிகளால் மாணவா்களுக்கு பள்ளிப் பாடங்கள் தவிர உலகில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து காட்சி வடிவில் விளக்கிக் கூற முடியும். இதனால், மாணவா்களின் கல்வி நலன் மேம்படும்’ என்று தினேஷ் சரவணன் தெரிவித்தாா்.
இந்நிலையில், இந்த ஸ்மாா்ட் வகுப்பறைகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை திறந்து வைத்து தன்னாா்வலா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
அப்போது, மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி, மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் வேணுசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஏற்கெனவே, சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் தலைமையிலான குழுவினா், வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் ஆதி திராவிடா் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 1.10 லட்சம் மதிப்பில் வகுப்பறைகளை கடந்த அக்டோபா் மாதத்தில் ஸ்மாா்ட் வகுப்பறைகளாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா!

மும்பைக்கு மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கமேனியின் இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளோம்! - டிரம்ப் பேச்சு!






