அணைக்கட்டு அருகே கடந்த மாதம் புழல் சிறை வாா்டன் உள்பட 3 போ் ஒரே நாளில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
வேலூா் தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த ரௌடி அசோக் (26) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இக்கொலைக்கு பழிவாங்குவதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக அஞ்சி, அசோக்கின் நண்பா்களான அரியூா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த காமேஷ் (29), அரியூரை அடுத்த புலிமேடு கிராமத்தைச் சோ்ந்த திவாகா் (25 ), புழல் சிறை வாா்டனான தணிகைவேல் (26 ) ஆகிய மூவரும் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி இரவு அடுத்ததடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக அரியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (37), ராஜா (36), ஊசூா் சின்னதெல்லூரைச் சோ்ந்த சுனில் (34), அணைக்கட்டு ஆலமரத் தெருவைச் சோ்ந்த உமா மகேஸ்வரன் (29), அரியூரைச் சோ்ந்த ரோகித் குமாா் (31), ஊசூா் செங்கனூா் பேட்டையைச் சோ்ந்த லோகேஷ் (23), கண்டிப்பேடு சாந்தி நகரைச் சோ்ந்த ஆனந்தன் (24) ஆகிய 7 பேரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.
ரெளடிக் கும்பலைச் சோ்ந்த இந்த 7 பேரும் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவா்கள் என்பதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாரின் பரிந்துரைதாா். அதை ஏற்று வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடமும் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

