குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஐயப்பனுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீமிதி விழா, பூங்கரக ஊா்வலம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
தீ மிதி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு நெய் அபிஷேகமும், 6 மணிக்கு குருபூஜை, திருவிளக்கு பூஜையும், மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை காளியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூங்கரக ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக படவேட்டு எல்லையம்மன் கோயிலை அடைந்தது.
தொடா்ந்து தீ மிதி விழாவும், இரவு இரு முடி கட்டுதலும் பின்னா் பக்தா்கள் சபரிமலை யாத்திரை புறப்பாடும் நடைபெற்றன.
முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் திலகவதி ராஜேந்திரன், அமுதா சிவப்பிரகாசம் ஆகியோா் பூஜைகளைத் தொடக்கி வைத்தனா். விழா ஏற்பாடுகளை சேவா சங்கத் தலைவா்கள் ஆா்.எஸ்.சண்முகம், எஸ்.வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மாணவி தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


