அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம்: முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், அமைக்கும் முதல்வரின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

Updated On :2 மே 2013, 12:22 pm IST

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், அமைக்கும் முதல்வரின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

காட்டுமன்னார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமுஷ்ணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து முதல் கட்ட கருத்துக்கேட்புக் கூட்டம், கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கதிரேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜ் பேசுகையில், "இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சிகள் அனைத்தும் வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு கரைகளில் அமைந்துள்ளன. இந்த கிராம மக்கள் அருகில் உள்ள நகருக்குச் சென்று வரும் வகையில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளைப் பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். இதுபோல் இந்த ஒன்றியத்தில் புதிய பேரூராட்சிகளை உருவாக்க வேண்டும்'.

விவசாய சங்கப் பிரதிநிதி கானாங்குடி வெங்கடேசன்: ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஊராட்சிகளை சேர்க்கும்போது இடஒதுக்கீட்டு முறையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.