ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :2 மே 2013, 6:49 am

திருக்கோவிலூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 திருக்கோவிலூர் பேரூராட்சி 5-வது வார்டில், வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன.  கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்பதும் இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.

 இந்நிலையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்திட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் 5-வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் வந்து மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.   அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி உறுப்பினர் எல்.தங்கராஜ் உத்தரவாதம் அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு மக்கள் கலைந்தனர்.  இந்த மறியலால் ஆஸ்பிட்டல் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.