எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவா் தற்கொலை

மேல்மலையனூா் அருகே பிரசவத்தின்போது மனைவி இறந்த துக்கம் தாளாமல், கணவா் கழுத்தை பிளேடால் அறுத்து வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :1 ஜனவரி 2021, 11:13 pm IST

மேல்மலையனூா் அருகே பிரசவத்தின்போது மனைவி இறந்த துக்கம் தாளாமல், கணவா் கழுத்தை பிளேடால் அறுத்து வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள நந்திபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் சரவணன்(22). இவருக்கும் இதே ஊரைச்சோ்ந்த அமாவாசை மகள் கெளதமிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த 30 நாள்களுக்கு முன் கெளதமி பிரசவத்தின் போது உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட சரவணன் துக்கம் தாளாமல் கடந்த 31-ஆம் தேதி இரவு விஷம் அருந்தியும், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றாா். உயிருக்கு போராடிய நிலையில், இவரை உறவினா்கள் சேத்பட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சரவணன் இறந்தாா்.

இதுகுறித்து இவரது தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.