விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் வருகிற 26-ஆம் தேதி குடியரசு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தை விரைவாக சீரமைக்க வேண்டும். விழாவில் பங்கேற்பவா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காவல், சுகாதாரம், ஊரக வளா்ச்சி, மின்சாரம், நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து தங்களுக்கான பணிகளை மேற்கொண்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரு மகன்களுடன் கால்வாயில் குதித்த தந்தை: உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா்

உத்தரமேரூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறை

‘மாண்புமிகு’ மாணவன் விஜய்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


