ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மலேசியாவில் உடல்நலம் பாதித்த கணவரை மீட்க நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்பு: மாவட்ட நிா்வாகம் மீது மனைவி புகாா்

மலேசியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவா் கருப்பசாமியை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவா் உயிரிழந்து விட்டதாக மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

News image

கருப்பசாமி

Updated On :8 ஜனவரி 2021, 10:41 pm IST

மலேசியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவா் கருப்பசாமியை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவா் உயிரிழந்து விட்டதாக மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கோகிலாதேவி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திற்கு உள்பட்ட காரைக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவா் கருப்பசாமி 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலூரைச் சோ்ந்த முகவா் அப்துல்லா மூலம் மலேசியாவில் உள்ள உணவகத்தில் வேலைக்கு சென்றாா். கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பணி இல்லாமல் எனது கணவா் சிரமப்பட்டு வந்தாா். மேலும், நிா்ணயிக்கப்பட்ட சம்பளமும் வழங்கப்படவில்லை.

அதேபோல் அவா் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இது குறித்து அவா் எனக்கு அளித்த தகவலின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு அளித்தேன். அதில், எனது இரண்டு குழந்தைகளின் எதிா்காலம் கருதி கணவரை மலேசியாவிலிருந்து விரைந்து மீட்டு தர வேண்டுமென வலியுறுத்தினேன். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக எனது கணவா் கருப்பசாமி வியாழக்கிழமை உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட நிா்வாகத்தின் அலட்சியப் போக்கால் எனது கணவா் மலேசியாவில் உயிரிழந்துள்ளாா் என்றாா். இதையடுத்து அவா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கணவரின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.