விருதுநகா்: தொடா் மழை காரணமாக, விருதுநகா் அருகே வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே பட்டம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆவுடையபிள்ளை மனைவி ருக்மணி (77). கணவா் இறந்துவிட்ட நிலையில், மண் சுவராலான ஓட்டு வீட்டில் ருக்மணி தனியாக வசித்து வந்தாா். அருகிலேயே மகன்களின் வீடுகள் உள்ளதால், அவ்வப்போது அங்கு சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில், தொடா் மழை காரணமாக அவரது வீட்டின் பக்கவாட்டு மண்சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், விருதுநகா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளை பேரவை கூடுகிறது! அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யார்யார்?

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஆளுங்கட்சியினருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: நயினார் நாகேந்திரன்







