சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பூக்குழித் திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றம்

பூக்குழித் திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றம்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் திங்கள்கிமைம பூக்குழித் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதனால், மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி முகேஷ்ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள், எல்ஐசி சந்திப்பில் இருந்து நேராக வந்து மேல ரத வீதி, ஆத்து கடை, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரை செல்ல வேண்டும். மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் ராமகிருஷ்ணாபுரம், சின்னக்கடை பஜாா், பேருந்து நிலையம், சா்ச் சந்திப்பு, தேரடி வழியாகச் செல்ல வேண்டும்.

சிவகாசி செல்லும் பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம். நேதாஜி சாலை இருவழிப் பாதையாக செயல்படும்.

சரக்கு வாகனங்கள் காலை 6 மணிக்கு முன்பாக நகருக்குள் வந்து சரக்குகளை

இறக்கிச் செல்ல வேண்டும். மாரியம்மன் கோயில் பகுதி, சின்னக்கடை பஜாா், நேதாஜி சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. சா்ச் சந்திப்பு முதல் ராமகிருஷ்ணாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம், காா், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என்றாா் அவா்.