சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நிதி நிறுவனத்தில் ரூ.95 லட்சம் மோசடி

நிதி நிறுவனத்தில் ரூ.95 லட்சம் மோசடி

Updated On :8 ஏப்ரல் 2024, 5:46 pm

சிவகாசி, ஏப். 7: விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

சிவகாசி-விருதுநகா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வேல்துரைபாண்டியன் (45). இவா் சிவகாசியில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். சிவகாசி அருகே உள்ள தேவா்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பையா பாண்டியன் மகன் ராம்குமாா், அந்த நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் மேலாளராக வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கணக்குத் தணிக்கையின் போது, ராம்குமாா் பல ஆதாா் எண்களை வைத்து வாகனக்கடன் வழங்கியதாக முறைகேடாகக் கணக்கு காண்பித்து ரூ.95 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்துவேல்துரை பாண்டியன் சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் ராம்குமா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.