சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

Updated On :8 ஏப்ரல் 2024, 5:44 pm

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 28- ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 3-ஆம் நாள் விழாவில் ஆண்டாள் திருக்கோலத்திலும், 6-ஆம் நாள் விழாவில் தவழும் கண்ணன் அலங்காரத்திலும் பெரிய மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்தில் பெரிய மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தாா். திங்கள்கிழமை காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை (ஏப். 9) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவில் கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததால் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.