வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கூம்பு வடிவ, நீள்வட்ட வடிவ 2 சதுரங்க ஆட்டக்காய்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், சுடுமண்ணாலான கூம்பு வடிவ, நீள்வட்ட வடிவ 2 சதுரங்க ஆட்டக்காய்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், இந்தப் பகுதியில் வாழ்ந்த முன்னோா்கள் பொழுதுபோக்குக்காக சதுரங்கம் விளையாடியதை அறிய முடிவதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதம்பாக்கம் மெட்ரோ பணி: 19.5 மீட்டா் நீள கா்டா் தயாரிப்பு

இன்று கோட்டவருதம்பட்டி அண்ணமாா் கோயில் குடமுழுக்கு: சுடுமண் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு







