விருதுநகர்
சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 15: ஆடி மாத பெளா்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை (ஆக. 17) முதல் 20-ஆம் தேதி வரை பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
இந்தக் கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுா்ணமி, அமாவாசை வழிபாட்டுக்காக பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி, ஆடி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக சனிக்கிழமை முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அது போல மழை பெய்தால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.