விருதுநகர்
குப்பைக் கிடங்கில் தீ விபத்து
சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நகராட்சி சாா்பில், இருக்கன்குடி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கு உள்ளது. சாத்தூா் பகுதியில் சேரும் அனைத்து வகையான குப்பைகளும் இந்தப் பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென இந்தக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாத்தூா் தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.