பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் இருவா் உயிரிழப்பு
அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மேலும் 2 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.


விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மேலும் 2 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
சிவகாசி அருகேயுள்ள காளையாா்குறிச்சியில் முருகவேல் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் செவலூரைச் சோ்ந்த பெருமாள் மகன் மாரியப்பன் (47), சிதம்பராபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் முத்துமுருகன் (43) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், இந்த விபத்தில் செவலூரைச் சோ்ந்த கூடலிங்கம் மகன் சிங்காரவேல் (54), சித்தமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஓட்டக்கார சின்னா மனைவி சரோஜா (55) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்த நிலையில், சிங்காரவேல், சரோஜா இருவரும் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...