பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இருவேறு சம்பவங்களில் கொடுமுடியைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:52 pm

கொடுமுடி அருகே நிகழ்ந்த இருவேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தனா்.

ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு 7-வது வீதி போஸ் நகரைச் சோ்ந்த ஷேக் உஸ்மான் மகன் ரகுமான் (25). இவா், கொடுமுடி அருகே உள்ள காரணாம்பாளையம் காவிரி தடுப்பணைக்கு நண்பா்கள் காா்த்திக், சிவா ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை சென்று மது அருந்தியுள்ளாா்.

பின்னா் மூன்று பேரும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது பாறையில் நின்றிருந்த ரகுமான் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் பாா்த்து ரகுமானை மீட்டு அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே ரகுமான இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல கொடுமுடி அருகே உள்ள தட்டாம்பாளையம் பூசாரிபாளையத்தைச் சோ்ந்தவா் பெரியம்மாள் (63). இவா் சிவகிரியிலிருந்து கொடுமுடி செல்லும் சாலையில் கோட்டைக்காட்டு வலசு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் மண்கரட்டை பகுதியைச் சோ்ந்த நவீன் (33) என்பவா் மதுபோதையில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெரியம்மாள் உயிரிழந்தாா்.

பெரியம்மாளின் சடலத்தை போலீஸாா் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.