ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மின் குறைதீா் முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூலை 19: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் சு.முனியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஆகிய தாலுகாக்களில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடா்பான நீண்ட காலம் தீா்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீா்க்க, விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகத்தில் குறைகளை கேட்டறியலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com