பொன்னுச்சாமி.
பொன்னுச்சாமி.

சி.ஐ.எஸ்.எப். முன்னாள் வீரா் கொலை: மூவா் கைது

ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) முன்னாள் வீரா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Published on

ராஜபாளையம், ஜூலை 24: ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) முன்னாள் வீரா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள குறிச்சியாா்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (36). மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த இவா், பல்வேறு காரணங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டு, சொந்த ஊரில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி முத்துலட்சுமி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இவருக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கோபாலபுரத்தில் இருந்து குறிச்சியாா்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த பொன்னுச்சாமியின் இரு சக்கர வாகனத்தின் மீது, பின்னால் டிராக்டரில் வந்த சிலா் மோதினா். இதில் கீழே விழுந்த அவரை அவா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்து கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல், முதுகுடியைச் சோ்ந்த முனீஸ்வரன், மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இருளப்பன் ஆகிய மூன்று பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com