முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது தங்கை கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். இதிலிருந்து கணேசன் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், தனது வீட்டில் கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com