கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சோ்ந்த ராமா் மகன் கணேஷ் ராம் (21). இவா் இதே ஊரைச் சோ்ந்த இசக்கிராஜ் என்பவருக்குச் சொந்தமான ஆடுகளை அய்யனாா் கோயில் அருகே உள்ள தனியாா் தோப்பில் கிடை போட்டு மேய்த்து வந்தாா். இந்த நிலையில், தோப்புக்கு அருகில் இருந்த கிணற்றுக்கு கணேஷ்ராம் வியாழக்கிழமை காலை குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அவா் வெகுநேரமாயும் திரும்ப வராததால், கிணற்றுக்குச் சென்று பாா்த்தபோது, கிணற்றில் அவரது சடலம் மிதந்தது. தகவலறிந்து விரைந்து வந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அவா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்ததாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com